Share via:
இன்று விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள்
ஆதரவு பெற்று ஆட்சியை தக்கவைத்திருக்கிறார். இந்த ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வேலுமணியின்
ஆதரவாளர்கள் 25 பேர் கதி என்னாகும் பரபரப்பாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியதும் சபாநாயகர் அரசினர்
தீர்மானத்தை விஜய் கொண்டு வருவார் என அறிவித்தார். இதனை தொடர்ந்து தனது அரசுக்கு ஆதரவு
தருமாறு விஜய் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து காங்கிரஸ், விடுதலை
சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் மற்றும் எம்எல்ஏ
காமராஜ் ஆகியோர் விஜய் அரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில்,
அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 22 பேர்
வாக்களித்த நிலையில், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதன் மூலம் தேவையான பெரும்பான்மையை
விடக் கூடுதல் பலத்துடன் விஜய் அரசு தனது பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘இந்த அரசு குதிரை பேரத்தில்
ஈடுபட்டுள்ளது. கட்சிக்குள் பிளவு வருவது இயல்பு. அவர்களை சந்தித்தது தவறு என்பதால்
நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கிறோம் எனக் கூறினார்.
இதையடுத்து எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் சி.வி.சண்முகம்
அணி சார்பில் எஸ்.பி.வேலுமணிக்கு பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு கொடுத்தார். இதற்கு
அதிமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 25 பேர்
விஜய்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதிமுக கொறடா உத்தரவை மீறியிருக்கிறார்கள். எனவே, இவர்கள் மீது
என்ன வழியில் நடவடிக்கை எடுப்பது என்று எடப்பாடி யோசித்துவருகிறார். மூன்றில் இரண்டு
பங்கு ஆதரவு வேலுமணி டீமுக்கு இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது
அதிமுக அணியில் ஆதரவளித்தோர்: 25
அதிமுக அணியில் எதிர்த்தோர் 22
ஒட்டுமொத்த ஆதரவு 144
எதிர்ப்பு 22 மற்றும் நடுநிலை 5 என்று நம்பிக்கை வாக்கெடுப்பு
முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு விஜய்க்கு சிக்கல் இல்லை.