Share via:
தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வர
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு
ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்த கையோடு திமுக எம்பிக்களின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டி
எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மீதான தங்களது
நிலைப்பாடு குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்
டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ்
தலைவருமான ப.சிதம்பரம், ‘மக்களவையில் 543 இடங்களில் தென்னிந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில்
இடம்பெற்றுள்ள பிரதிநிதிகளின் சதவிகிதம் 24.3% ஆக உள்ள நிலையில் அதுவே 850 இடங்களாக
உயர்த்தப்பட்டதற்கு பிறகு அந்த சதவிகிதம் 20.7% ஆக குறைகிறது அதுவே ஹிந்தி பேசக்கூடிய
பகுதிகளின் பிரதிநிதிகளின் சதவிகிதம் தற்பொழுது 38.1% ஆக உள்ள நிலையில் அது 43.1% அதிகரிக்கிறது!
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச்
சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை
தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்
தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும் அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின்
தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார்
140 ஆக மேலும் உயரும் மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம்
24.3%. இது குறைந்து 20.7% ஆகும் மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும்,
ஒடுக்கப்படும் அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க
வேண்டும்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜக கொண்டு வரும் தொகுதி
மறுவரையறையால் பலனடையும் மாநிலங்கள் உத்தர பிரதேசம் பீகார் ராஜஸ்தான் மத்திய
பிரதேசம் மகாராஷ்டிரா அதுவே பிரதிநிதித்துவம் பறிபோகும் மாநிலங்கள் என்றால் முதல்
இடம் தமிழ்நாடு அடுத்தது கேரளா பிறகு ஆந்திரா தெலங்கானா அதன்பிறகு ஒடிசா பிறகு மேற்குவங்கம்.
இந்தியா என்ன செய்யப்போகிறது..?
