Share via:
ஆசிய விளையாட்டு போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 16க்கு ஒன்று என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வெற்றி பெற்று பெற்றுள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது.
இந்நிலையில் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தன்னை எதிர்த்து களம் இறங்கிய சிங்கப்பூர் ஹாக்கி அணியை விட சிறப்பாக விளையாடினர். இதன் காரணமாக முதல் பாதியில் இந்தியா 6க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
அதன்படி தொடர்ந்து ஆடிய மந்தீப் இருமுறை கோல் அடிக்க, லலித், குர்ஜந்த், சுமித் மற்றும் விவேக் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். அதைத்தொடர்ந்து மூன்றாவது காலிறுதியில் மேலும் 5 கோல்களை அடித்த இந்திய அணி தனது வெற்றியை உறுதி செய்தது.
ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 16க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணியை வெற்றி பெற்றது. ஹாக்கி வீரர் மந்தீப் சிங் 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் 4 கோல்களை அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.