News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆட்சி செய்தபோது மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது, அடித்துவிரட்டுவது, துப்பாக்கியால் சுடுவது போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடந்துவந்தன. இப்போது ஜோசப் விஜய் ஆட்சியில் இருக்கிறார் என்பது தெரியாமல் விளையாடியிருக்கிறது இலங்கை என்று தவெகவினர் கொதிக்கிறார்கள்.

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒரு விசை படகையும், அதில் இருந்த 8 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

சிறைபிடித்த மீனவர்களை நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தி இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’இன்னமும் இந்த விஷயம் முதல்வர் விஜய்க்குத் தெரியாது என்றே நினைக்கிறோம். அவருக்கு மட்டும் தெரிந்தால், அவரே ஒரு பிளைட் பிடித்து இலங்கைக்குச் சென்று சிறையில் இருந்து மீனவர்களை மீட்டு வந்துவிடுவார். வெயிட் அண்ட் வாட்ச்’’ என்கிறார்கள்.

அய்யோ பாவம், இலங்கை என்ன கதியாகப் போகிறதோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link