Share via:
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று
மத்திய அரசு கூறியிருப்பது டெல்டா விவசாயிகளின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளது.
தண்ணீர் இல்லாமல் வாடிவரும் டெல்டா விவசாயிகளின் உயிரோடு விளையாடும் பாஜகவையும் கர்நாடக
காங்கிரஸையும் தடுப்பாரா விஜய் என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ்,
மேகதாது திட்டத்தைச் செயல்படுத்தும் முன் கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக்
கர்நாடகா பெற வேண்டியது அவசியமா என்பது குறித்துக் கேள்வி எழுப்பினார்.
‘2007-ஆம் ஆண்டு காவிரி நீர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்
18-வது பிரிவு சரியானதே என உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. நடுவர் மன்ற உத்தரவுக்கு
முரண்படாத வகையில், ஒரு மாநிலம் தன் எல்லைக்குள் இருக்கும் நீரைப் பயன்படுத்துவதையோ
அல்லது சீரமைப்பதையோ இந்த உத்தரவு தடுக்காது என்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில்
மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை, காவிரி நடுவர்
மன்றத்தின் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு
இல்லை. இதனால்,
நடுவர் மன்றத் தீர்ப்புக்கு அமைவாகத் திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு
கோரி, கர்நாடக திட்ட அதிகாரிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது’’ என்று ராஜ் பூஷண்
சவுத்ரி தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான காவிரி நீர்ப் பங்கீடு
கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசு இத்திட்டத்திற்குத் தொடர்ந்து கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது குறித்துப் பேசும் திமுகவினர், ‘’கர்நாடகத்தில் நடப்பது காங்கிரஸ்
ஆட்சிதானே? தமிழக காங்கிரஸ் தலைவர் கர்நாடக தலைவர்களிடம் அணை கட்ட வேண்டாம், காவிரியில்
தண்ணீர் விடுங்கள், தமிழகத்திற்கு உரிமையான நீரை விடவேண்டும். தென்பெண்ணை ஆற்று சிக்கல்
தீர்க்கப்பட வேண்டும்
ஒகேனக்கல் நீரை தமிழகம் பெற வேண்டும் என்று கூறியிருக்கலாமே? மேலும்
காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியான தவெக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தன்னுடைய அமைச்சரவையில்
உள்ள காங்கிரஸ் அமைச்சரை பெங்களூருக்கு அனுப்பி இத்தகைய கோரிக்கைகளை வற்புறுத்தியிருக்கலாமே?
இப்போது முதல்வர் கர்நாடக செல்ல இருக்கிறார். அப்போதாவது பேசுவாரா அல்லது பூமி பூஜை
செய்துவிட்டு வருவாரா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
விஜய்க்கு தலைவலி ஸ்டார்ட்