News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய் ஆட்சிக்கு வந்து 100வது நாளைத் தொடப்போகிறார். புதிய மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு மாற்றமும், நம்பிக்கையும் கிடைத்திருக்கிறதா என்று மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிக்கும் பக்கா ரிப்போர்ட் வேண்டுமென்று உளவுத்துறையையும் தனியார் நிறுவனங்களையும் உசுப்பிவிட்டுள்ளார் நடிகர் விஜய்.

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்றாலும் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் துணையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. மே 10ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

லஞ்சம், பெண்கள் பாதுகாப்பு, போதை ஆகியவற்றுக்கு எதிராக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே குரல் கொடுத்துவருகிறார். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது அல்லது முறைகேடுகள் நடப்பது குறித்து பொதுமக்கள் எந்தவித பயமுமின்றி நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்ய சிறப்பு வாட்ஸ்அப் உதவி எண் வெளியிடப்பட்டது. இதன் மூலம் பெறப்படும் புகார்கள் மீது முதலமைச்சரின் தனிப் பிரிவு நேரடியாகக் கவனம் செலுத்தி, உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

குறிப்பாக 2026 ஜூலை 10 அன்று கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், “உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால், ‘இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜய்யோட ஆட்சி’ என்று உறுதியாக சொல்லுங்கள்.” என்று அதிரடியாகப் பேசினார். இதுவரை எந்த ஒரு ஆட்சியாளரும் இத்தனை உறுதியுடன் லஞ்சத்துக்கு எதிராகப் பேசியதில்லை என்பது உண்மை.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதை முதன்மை இலக்காகக் கொண்டு, முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் சிங்கப்பெண் என்ற சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டது. இந்த அதிரடிப் படை 24 மணி நேரமும் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அதோடு போதை ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது.

38 மாவட்டங்களிலும் 65 Anti-Narcotic Task Force (ANTF) பிரிவுகளை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை போதைப்பொருள் விற்பனைக்கான இடங்களாக மாற்றுவதைத் தடுக்கும் வகையில் கல்வி நிறுவனங்களை மையப்படுத்திய ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலைத் தடுப்பதில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2026-ல் மதுபான விற்பனைக்கு வரி விதிக்கும் மசோதாவையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவது நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மக்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது, உண்மையான மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்று விஜய் ஒரு ஆய்வு நடத்தச் சொல்லியிருப்பதுதான் உண்மையான மாற்றம் என்கிறார்கள்.

விஜய் ஆட்சியமைத்த 100வது நாள் மக்களைக் குஷிப்படுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறதாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link