News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தகைசால் தமிழர் விருது என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்கும் பாடுபட்ட பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது. விஜய் ஆட்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது இன்று சுதந்திரதின விழாவில் வழங்கப்பட்டது. இவர் டாக்டர் ராமதாஸின் சம்பந்தி. அதாவது கிருஷ்ணசாமி மகள் சௌமியாவைத்தான் அன்புமணி ராமதாஸ் திருமணம்முடித்திருக்கிறார்.

இந்த விருது மூலம் காங்கிரஸ் கட்சியையும் பாமகவையும் தங்கள் பக்கம் இழுத்துள்ள விஜய், இந்த அரசை தாங்கிப்பிடிப்பது போன்று பிம்பம் உருவாக்கிய திருமாவளவனுக்கு செக் வைத்திருக்கிறது.

இதுவரை தகைத்தால் தமிழர் விருது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சங்கரய்யா, நல்லகண்ணு, குமரி அனந்தன், வீரமணி, காதர் மொய்தீன் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழும் ரூ. 15,00,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது…

கிருஷ்ணசாமிக்கு பொதுவாழ்விலும் மக்கள் பணியிலும் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் உழைத்ததற்கு கெளரவம் என்று சொல்லப்பட்டாலும், இது விஜய்யின் அரசியல் மூவ் என்றே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link