News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

விஜய் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்பதை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார். இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் பல்வேறு துறை அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தொடர் ஆலோசனை நடத்திவருகிறார். பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல முக்கிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படலாம். குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர், திருமண உதவியாக ஒரு சவரன் தங்கம் பட்டுச்சேலை, மாணவர்களுக்கு கல்விக்கடன், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு உண்டு.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பெண்கள், இளைஞர்கள் வாக்கு வாங்கி தான். தற்போது அவர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்புகள் இடம் பெறலாம்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத புத்தம்புது சூப்பர் சலுகைகள் வழங்கப்படவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள். மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link