News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

நேதாஜி விமான விபத்தில் மரணம் அடையவில்லை, இன்னமும் ஒளிந்துகொண்டு இருக்கிறார் என்றும் விரைவில் வெளியே வருவார் என்றும் ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு இருக்கிறது. அதேபோல், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் வருவார் என்று மீண்டும் அதீத நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் பழ.நெடுமாறன்.

விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான ஆதரவாளராக கருதப்பட்ட பழ.நெடுமாறன்,  தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேசினார். அப்போது அவர், ‘’விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். இதை நான் 2009-ம் ஆண்டு முதல் தெரிவித்து வருகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார். தற்போது வெளியே வருவதற்கான சர்வதேச சூழ்நிலை இல்லை. பிரபாகரன் மகள் ஏற்கெனவே தொலைக்காட்சி முன்பு தோன்றி பேசி உள்ளார்’’ என்று தெரிவித்தார்.

பிரபாகரன் மரணச் செய்தி வந்தபோதே அதை பழ.நெடுமாறன் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் ஒளிந்திருக்கிறார், உரிய நேரத்தில் வருவார் என்று சொல்வதை அவரது ஆதரவாளர்களே ஏற்கவில்லை.

அது எப்போது உரிய நேரம் வரும்..? அப்போது நேதாஜியையும் கூட்டிக்கொண்டு வருவாரா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link