News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இதுவரை எப்போதும் இல்லாத வகையில் அரிசி, பால், முட்டை விலை கடுமையாக ஏறியிருக்கிறது. ஆட்சியில் இருக்கும் விஜய் இதுவரை வாயைத் திறக்கவே இல்லை.

அரிசி விலையேற்றம் குறித்து அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார், ‘’தற்போது அனைத்து வகை அரிசிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 5 ரூபாய் இருந்து 20 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது ,இது சராசரியாக 20 சதவீத வரை விலை உயர்ந்து இருக்கிறது. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூபாய் 250 முதல் ரூபாய் 400 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்திற்கு ஓர் ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவை,ஆனால் 75 லட்சம் டன் அரிசி மட்டுமே இங்கு உற்பத்தியாகிறது .அதிலும் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை .ஜூன் ஜூலைகான நீரை கர்நாடகம் திறந்து விடவில்லை இதனால் டெல்டா பகுதிகளில் வறட்சி தலைவிரித்து ஆடுகிறது.

நமது தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உயர் ரக , சன்ன ரக அரிசி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இம்முறை கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் சன்னரக அரிசி விளைச்சல் பாதிக்கப்பட்டு உளளது. அதனால் தமிழகத்திற்கு அவர்கள் அனுப்பும் அரிசியின் அளவும் குறைந்துவிட்டது .அதோடு தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் சுமார் ஒரு லட்சத்துககு மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாகிவிட்டது. தற்போது தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது,

குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கு கூட அரிசி கிடைக்கவில்லை விலை ஏறிக்கொண்டே போகிறது என மக்கள் கலங்கி போயிருக்கிறார்கள்‌ மக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங்கும் விலையில்லா அரிசியும் தற்போது சமைத்து சாப்பிடும் தரத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என்கிற ஒரு புகாரும் வந்து கொண்டுள்ளது‌ அண்ணாச்சி, அண்ணாச்சி, விஜய் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு..?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதேபோல் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் பால் நிறுவனங்கள் 2வது முறையாக பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. இதனால் ஆவின் பாலுக்கு மேலும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 5 ரூபாய்க்கு விற்பனையான முட்டை விலை ஒன்பது ரூபாயாக உயர்ந்துள்ளது. நான்கு ரூபாய்க்கு விற்ற முட்டை தற்போது படிப்படியாக விலை ஏறி ஒன்பது ரூபாய் வந்துவிட்டது. முட்டையை விலை உச்சத்தில் சென்றதால் சாமானிய மக்கள் முட்டை வாங்கி சாப்பிட முடியாத அளவுக்கு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் முட்டை விலை உச்சம் தொட்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், விஜய் இன்னமும் ஜனநாயகன் மயக்கத்தில் இருந்தே வெளியே வரவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link