Share via:
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்றுள்ளது.
வன்னியரசு அமைச்சராகத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், விசிக முதன்மை செயலாளர்
ஆளூர் ஷாநவாஸ் நேரடியாக விஜய் அரசு மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
அதாவது தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி ஆட்சி தான் நடக்குது தமிழ்நாட்டுல
தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது என்று கூறியிருக்கும் ஷாநவாஸ் அதற்கு ஆதாரமாக
தலைமைச் செயலாளர் நியமனத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததும் தேர்தல்
ஆணையம் தலைமைச் செயலாளராக சாய்குமாரை நியமித்தது. அவர் பாஜகவின் கைப்பாவை என்பது எல்லோருக்கும்
தெரியும். விஜய் ஆட்சிக்கு வந்ததும் ஏகப்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஆனால், சாய்குமாரின்
பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதான் பாஜகவின் நிலைப்பாட்டில் விஜய் இருப்பதை
சுட்டிக்காட்டுகிறது’’ என்று நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஏற்கெனவே பல வில்லங்க விவகாரங்களைப் பேசியிருக்கும் ஆளூர் ஷாநவாஸ்க்கு
திருமா வேண்டுமென்றே இந்த தேர்தலில் சீட் கொடுக்கவில்லை. இப்போது அவரது கட்சி பங்கேற்றுள்ள
ஆட்சி மீது தாக்குதல் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் விஜய்க்கு கடும் கோபத்தைக் கொடுத்துள்ளதாம்.
இனியும் விசிக ஆதரவு தேவையில்லை என்ற நிலைப்பாடு விஜய் அரசுக்கு
வந்துவிட்டது. திருமா இல்லையென்றால் அன்புமணி இருக்கிறார். எனவே, உடனடியாக ஆளூரை வெளியேற்றுங்கள்
என்று ஆதவ் மூலம் உத்தரவு போட்டிருக்கிறாராம்.
என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார் திருமா. ஆளூர் வெளியேறினால்
நேரடியாக திமுகவில் இணைந்து மேலும் அதிகமாக தாக்குதல் நடத்துவார் என்று அஞ்சுகிறாராம்.
விஜய்யா, ஷாநவாஸா…? சோபாவா, கொள்கையா..? என்று முடிவெடுக்க வேண்டிய
டெலிகேட் தருணம் திருமாவுக்கு வந்துவிட்டது.