News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

விஜய் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் முடிவதற்குள் 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இத்தனைகும் இன்னமும் மாதம் 2,500 ரூபாய் தரவில்லை, தமிழ்நாட் முழுவதும் இலவசப் பேருந்து தரவில்லை. இளைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட மாதம் 4,000 ரூபாய் வழங்கவில்லை. அதற்குள் இத்தனை கோடி கடன் எதற்கு என்று திமுகவினர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள்.

டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்த விஜய் இப்போது எக்கச்சக்க பார்கள் தனியே திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  டாஸ்மாக் பார் நடத்துவதற்கு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணை மூலம் இனிமேல் மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் மதுபானக் கூடம் அமைக்க முடியும் மேலும் 15 சதுர மீட்டர் குறைந்த பட்ச அளவு என்பது 20 சதுர மீட்டர் என்று மாற்றப்பட்டது அதாவது குறைந்த பட்ச அளவு 205 சதுர அடிகள் மது கூடம் இருக்க வேண்டும் இதனை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுகூட ஒப்பந்தம் டெண்டர் யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இது, தவெகவினருக்கு பார் வழங்கும் முயற்சி என்றே கருதப்படுகிறது.

இந்த ஆட்சியின் குளறுபடிகள் குறித்து கே.சி.பழனிசாமி, ‘’விஜய் அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்தார்கள். ஆனால், இதற்கு முன்பு 1,000 மின்கட்டணம் செலுத்தியவர்கள் தற்போது 3,000 செலுத்துகிறோம் என்று ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

விவசாயக் கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை என்று டெல்டா விவசாயிகள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜூன் 12-ஆம் தேதி திறக்க வேண்டிய காவேரி நீர் இன்னும் திறக்கப்படவில்லை. டெல்டா பகுதிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் சென்றடையாவிட்டால், இந்த ஆண்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே அரிசி விலையும் உயர்ந்துவிட்டது.

717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக அறிவித்துவிட்டு, தற்போது 1,500-க்கும் மேற்பட்ட எலைட் கடைகளைத் திறந்து, வெளிமாநில மதுபானங்களை விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி, 10 வசூலிப்பதை ஒழிப்போம் என்று கூறினார்கள். ஆனால், ஊதிய உயர்வு கிடைத்த பிறகும், “அதெல்லாம் முடியாது… இப்போ நாங்க 20 வாங்குவோம்; முடிஞ்சதைப் பாருங்க!” என்று டாஸ்மாக் ஊழியரே வீடியோ வெளியிடுகிறார்.

பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை ஒழித்துவிட்டோம் என்று கூறிய நிலையில், பழனியில் 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் 2 கோடிக்கு தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஊடகங்களில் வெளிவந்த சம்பவம். வெளிவராமல் இன்னும் எவ்வளவு நடந்திருக்குமோ என்பது தெரியவில்லை.

தற்போது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பெறலாம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் ராஜினாமா டெல்லியில் உள்ள இளைஞர்களின் போராட்டத்தால் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு பாடம் புகட்டப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டு மாணவர்களின் கோரிக்கையான நீட் விலக்கு என்பதை தவெக அரசாங்கம் வலியுறுத்தி போராடினால் அதை பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, ஏன் இன்னும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள், அதற்கு முயற்சி செய்வார்களா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link