Share via:
விஜய் கட்சியில் மதுரை மேயருக்குப் போட்டியிட ஆசைப்படும் மு.க.அழகிரியின்
மகள் கயல்விழி, வங்கி மேலாளருக்கு பளார் அறை கொடுத்த சம்பவம் வைரலாகிவருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எப்படியாவது திமுகவுக்குள்
நுழைந்துவிட வேண்டுமென அழகிரி கடுமையான முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவருக்கும்
அவரது ஆதரவாளர்களுக்கும் ஸ்டாலின் வாய்ப்பு கொடுக்கவில்லை.
எனவே, விஜய் பதவியேற்பு விழாவில் பங்குபெற்ற கயல்விழி பெரும் பரபரப்புக்கு
ஆளானார். மதுரை மேயர் பதவி வழங்கப்பட்டால் தவெகவில் இணையத் தயாராக இருந்த கயல்விழிக்கு
இன்னமும் விஜய் பச்சைக் கொடி காட்டவில்லை.
இந்த நிலையில், அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில்
இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்துள்ளார். லிப்ட் செயல்பாடு
தொடர்பான பிரச்சனை குறித்து பேச வந்த போது வங்கி மேலாளர் கன்னத்தில் கையை வைத்து கேட்டுக்
கொண்டு இருந்ததால் ஆத்திரமடைந்து கை நீட்டியிருக்கிறார். இந்த வீடியோ வெளிவந்து பெரும்
பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து பேசும் அழகிரி ஆதரவாளர்கள், ‘’பேங்க் மேனேஜர்கள் அதிலும்
குறிப்பாக எஸ்பிஐ மேனேஜர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். ஒழுங்கா பதில் சொல்ல மாட்டார்கள்.
அலட்சியம் செய்வார்கள். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் கயல்விழி அடித்திருக்கிறார்.
உண்மையில் அவர் பூ போன்று மென்மையானவர்’’ என்கிறார்கள்.
அதேநேரம் பாஜகவை சேர்ந்த திருப்பதி நாராயணன், ‘’அடையாறில் உள்ள
பொதுத்துறை வங்கியின் மேலாளரை வங்கிக்குள்ளேயே சென்று தாக்கிய திமுக வின் முன்னாள்
மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும். அரசியல் அதிகாரம் இருந்த எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அகம்பாவம் ஒழிக்கப்பட
வேண்டும்.’’ என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார்.
அப்பா அழகிரி மதுரையில் மூன்று பேரை உயிருடன் கொளுத்தினார். மகள்
கயல்விழி கன்னத்தில் அறைந்திருக்கிறார். அஞ்சா நெஞ்சன் ஃபேமிலி என்றால் சும்மாவா..?
