Share via:
வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிஅழக வெற்றிக்
கழகம் 60 எம்.பி. சீட் வெல்லும், விஜய் பிரதமராக பதவி ஏற்பார் என்று விஜய்யின் ஆஸ்தான
ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் வெளியிட்டுள்ள கணிப்பு அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக விரைவில் கட்சிப் பெயர் மாற இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை இந்திய வெற்றிக் கழகம் என்று மாற்றம் செய்வதற்குத்
திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கேரளத்தில் தமிழக வெற்றி கழகம் ஆரம்பிப்பதற்கான
அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய
ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. எனவே, அங்கு ஒரு நடிகரை மாநிலத் தலைவராக நியமித்து கட்சி
தொடங்கும் பணி நடக்கிறது. அதே போன்று ஆந்திரா, கர்நாடகா என்று தென்னிந்தியாவை குறிவைத்து
அரசியல் திட்டமிடப்படுவதாக விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
தென்னிந்தியாவில் இருந்து 60 எம்.பிக்கள் விஜய்க்குக் கிடைப்பார்கள்.
அடுத்து, நாடாளுமன்றத்துக்கு முழு மெஜாரிட்டி எந்த கட்சிக்கும் கிடைக்காது. எனவே, விஜய்
பிரதமராவார் என்கிறார்கள்.
அடுத்து தமிழகத்தில் விஜய் புதிய கூட்டணியும் முடிவு செய்துவிட்டார்.
அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சி மற்றும் மதிமுகவுக்கு
இடம் இல்லை என்பதுதான் ஆச்சர்யமான தகவல். நம்பகமான கூட்டாளியாக பா.ம.க.வை மட்டும் வைத்துக்கொண்டு
வட மாநிலத்தில் ஜெயிக்கத் திட்டமிடுகிறார்.
சென்னைக்கு கூட்டணி தேவையில்லை என்பதால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில்
மட்டும் ஓட்டு வாங்குவதற்கு வழி தேடப்பட்டு வருகிறது. ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும்
காங்கிரஸ், விசிகவுக்கு இடமே இல்லை என்கிறார்கள்.
இப்படியெல்லாம் நடக்குமா, விஜய் பிரதமர் ஆவாரா என்று சிலர் கிண்டல்
செய்கிறார்கள். இப்படித்தான் விஜய் முதல்வராவா, 10% ஓட்டு கூட வாங்க மாட்டார் என்று
கிண்டல் செய்தார்கள்.
அதனால், அரசியலில் எதுவும் நடக்கலாம். விஜய் பிரதமராகிவிட்டால்,
தமிழகத்துக்கு யாருப்பா முதல்வர்..?