Share via:
திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பு நடக்கும்… திமுக தான் தப்பே
செய்யும் என்று இன்று சட்டமன்றத்தில் பேசி அட்டகாசம் செய்திருக்கிறார் முதல்வர் விஜய்.
இன்று நேரடியாக திமுக குறித்து, ‘’எதுக்கெடுத்தாலும், நாங்க மிசாவை
பார்த்தவங்க மிசாவை பார்த்தவங்கன்னு சொல்றாங்க. ஆனால், திமுக குறித்து கவிஞர் கண்ணதாசன்
என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
‘’பேசிப் பழகிய பொய்..! வாங்கிப் பழகிய கை..! போட்டுப் பழகிய பை..!’’
என்று ஸ்டைலாகப் பேசினார். மேலும் அவர், ‘’யார் இந்த ரத்தீஷ்? யாருக்கு நெருக்கமானவர்?
தவெக ஆட்சி அமைந்த பிறகு ஏன் துபாய்க்குச் சென்று தலைமறைவானார்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘’பார்ட்டி ஃபண்ட் ஆதாரம் பக்கத்துலதான் இருக்கிறது’’
என்று உதயநிதி பார்த்து முதலமைச்சர் சொன்ன வார்த்தை தீயாக மாறியிருக்கிறது. ஏனென்றால்
உதயநிதி அருகில் அமர்ந்திருக்கிறது கே.என். நேரு.
சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய விஜய், ‘’குற்றத்திற்கு போதை கலாச்சாரம்
காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல… ஊழலற்ற நேர்மையான ஆட்சி
செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது போதைப்பொருள்
கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது…
காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.
போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி
இருக்கிறோம்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். முதலமைச்சர் விஜய் சாலைகள், ஆலைகள்
அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு
காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்.
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும்
சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும்
அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை… ஒவ்வொரு குற்றத்திற்கு
பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்… அனைத்து குற்றங்களும்
கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல…’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.