Share via:
திமுக ஆட்சியில் செல்வாக்குடன் வலம் வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம்
மற்றும் செந்தில்வேலன் ஆகியோர் இன்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது, விஜய்யின்
அதிரடி என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின்
(ஆவின்) லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வந்த ராஜீவ் குமார் ஐ.பி.எஸ்,
சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சிப் பிரிவு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.ஜி.பி எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம்
ஐபிஎஸ், ஆவின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஜி டாக்டர் கே.ஏ.
செந்தில்வேலன் ஐ.பி.எஸ், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல்
இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த அதிரடி மாற்றங்களுக்கான உத்தரவைத் தமிழக அரசின்
கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
முந்தைய 2006 – 2011 திமுக ஆட்சியில் ஜாபர் சேட் மிகவும் செல்வாக்குடன்
இருந்தார். அடுத்த ஜெயலலிதா ஆட்சியில் அவர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார்.
அந்த வகையில் இப்போது டேவிட்சன் தேவாசிர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு
டி.ஜி.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.