Share via:
அதிமுக உள்கட்சி விவகாரங்கள் மற்றும் அதிகாரப் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.
அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களாக செயல்பட்டு வரும் ‘நமது அம்மா’ நாளிதழ் மற்றும்
‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி வேலுமணி டீம் கைக்கு மாறியிருக்கிறது.
இப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 சட்டமன்ற உறுப்பினர்களும்,
வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பில் 25 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
இப்போது, ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியின்
பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்
பெயர் புதிய நிறுவனராக இடம்பெற்றுள்ளது
ஆனால் இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’அதிமுகவில் இருந்து
டிடிவி தினகரன் நீக்கப்பட்டார். பொதுச் செயலாளர் சசிகலா கழற்றப்பட்டார். அவர்களுக்கு
ஆதரவான 16 எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார்,
செங்கோட்டையன் அதிரடியாக துரத்தப்பட்டார்.
இவர்கள் எல்லாமே எப்படியாவது கட்சிக்குள் கட்சி உறுப்பினராகவாவது
திரும்ப உள்ளே வர துடி துடியாய் துடித்துனர். ஆனால் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை
எடப்பாடி.
மேற்கண்டவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியாத எடப்பாடி பழனிசாமியை
இந்த 25 பேர் என்ன செய்ய முடியும். எப்படி பார்த்தாலும் கடைசி கட்டமாய் கோர்ட் தீர்ப்பு
வரும்போது 25 பேரின் எம்.எல்.ஏ பதவி காலியாகிவிடும்’’ என்கிறார்கள்.