News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 3,290 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், தங்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்கக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவ அவசர தேவைக்காகவும், உடனடி மருத்துவ வசதிக்காகவும் தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரம் செவிலியர்களும், 300 மருத்துவர்களும் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். 

 

இதில் 3ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக பணியில் இருந்து நிரந்தர செவிலியர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டதோடு 300 தற்காலிக மருத்துவர்களும் நிரந்தர மருத்துவர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

 

இதில் மீதமுள்ள 3,290 தற்காலிக செவிலியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 31.12.2022 அன்று பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

 

இதைத்தொடர்ந்து எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய பணிநியமன முறை பின்பற்றப்பட்டுள்ளது என்று கூறி 6 வாரங்களுக்குள் மீண்டும் அரசு பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஜூலை 12ம் தேதி உத்தரவிட்டது.

 

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்றும், தங்களுக்கு நிரந்தர பணிநியமன ஆணை வழங்கி உத்தரவிட வேண்டும் என்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மருத்துவ ஆணைய கொரோனா செவிலியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கையில் பதாகைகளை ஏந்தி, கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்துள்ளது வேதனையை வரவழைக்கிறது. கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களுக்கு இப்படிப்பட்ட நிலையா என்று பொதுமக்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link