Share via:
திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் காட்டுத்தனமாக வெட்டுப்பட்ட வடமாநில
இளைஞர் சிராஜ் ஒரே நாள்ல டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தமிழகம்
முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக அரசின் சிகிச்சை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டாரா அல்லது
போலீஸ் தரப்பில் அழுத்தம் கொடுத்து அனுப்பப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவினர், ‘’திருத்தணியில் 17 வயது கஞ்சா போதைச்
சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் சூரஜ், சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு
சென்றுவிட்டதாக திமுக அரசின் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராஜிவ்காந்தி
அரசு அவர் மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறியதாகவே செய்திகள் வருகின்றன.
உடல் முழுக்க வெட்டுகளால் சிதைக்கப்பட்டு, உயிருக்கு போராடியவருக்கு
ஒரே நாளில் சிகிச்சை முடிந்ததாக கூறுவது பச்சைப் பொய் இல்லையா? கொலைவெறித் தாக்குதலுக்கு
ஆளான ஒரு நபரை எப்படி டிஸ்சார்ஜ் செய்தது திமுக அரசு? இது தான் ஸ்டாலின் அரசு நலம்
காக்கும் லட்சணமா?
தன் சொந்த ஊருக்கே செல்வதாக அந்த நபர் அழுகின்ற அளவிற்கு, தமிழ்நாடு
மீதான நம்பிக்கை அவருக்கு போயுள்ளது. இதற்கு உள்ளபடியே பொம்மை முதல்வரும், அவருக்கு
முட்டு கொடுக்கும் மாரத்தான் அமைச்சரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். “கஞ்சா எங்கே
இருக்கிறது?” என்று எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து கேட்கும் மாரத்தான் அமைச்சர்
மா.சு., தன் துறை சார்ந்த ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று பார்க்கட்டும். அங்கே தானே
இருந்தது கஞ்சா செடி?
போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, தேசிய
அளவில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டது தான் ஸ்டாலின் அரசின் சாதனை’’ என்கிறார்கள்.