News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஜீரோ அளவுக்குக் கொண்டுவந்துள்ளோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகத்திலேயே குத்துவது  போன்று அவ்வர் கஞ்சா வியாபாரியுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாஜகவினர், ‘’சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் தமா.சுப்பிரமணியன் அவர்களுடனும், இந்தப் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான புகைப்படத்துக்கு பல காரணங்களைச் சொல்லி மழுப்பிய, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள், பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இந்த அழகில், அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, 196 வது ‘அ’ வட்ட கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள், திமுகவை தங்கள் கூடாரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை…’’ என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

யார் அந்த சார் என்பதற்குப் பதிலாக யார் அந்த லேடி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link