Share via:
சென்னை மாநகராட்சி மேயர் இன்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசும்போது, ‘‘1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உள்ளே கரைக்கப்பட்ட நிலையில், சுமார் 50 சிலைகள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் உள்ளே போகாமல் தடுமாறுகிறது. இதனால் பெரிய சிலைகளை மீண்டும் கடலில் போடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் இரவு பகல் பாராமல் பணியாளர்களும், மீனவர்களும், தன்னார்வலர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையும் தேவைப்படும் பட்சத்தில் கிரேனுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். சிலைகளுடன் கடலில் போடப்பட்ட 40 மெட்ரிக் டன் பூக்கள் போன்ற குப்பைகளை அகற்றி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சில சிலைகள் மட்டுமே கரையாமல் கரை ஒதுங்குவது வழக்கம்தான். இந்த முறை 20 பெரிய சிலைகள் கரை ஒதுங்கியுள்ளது என்றும், பெரும்பாலான சிலைகள் தானாக கரைந்துள்ளது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.