Share via:
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி இன்னமும் முடிவு
செய்யாத நிலையில் பாஜகவினர் பட்டியலே தயார் செய்திருப்பது அரசியல் கலவரமாகியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட
நிலையில் இந்த தேர்தலில் எப்படியும் 40 இடங்கள் பெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
அதன்படி இப்போதே 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளும், திருநெல்வேலி,
மதுரை, சிவகாசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா இரண்டு தொகுதிகளும், மற்ற மாவட்டங்களில்
தலா ஒரு தொகுதியும் பாஜக-வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோட்டில் விஜயதரணி,
நாங்குநேரியில் தமிழிசை, திருச்செந்தூரில் சரத்குமார், சாத்தூரில் நயினார் நாகேந்திரன்,
சென்னை தி.நகரில் வினோஜ் பி.செல்வம், கோவை தெற்கில் வானதி சீனிவாசன், பேராவூரணியில்
கருப்பு முருகானந்தம், ராசிபுரத்தில் வி.பி.துரைசாமி என முதல்கட்ட தொகுதிகளும், வேட்பாளர்களும்
இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அண்ணாமலை போட்டியிட விருப்பம் காட்டவில்லை என்றாலும் அவருக்கு
அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுகிறதாம்.
இந்த விவகாரம் அதிமுகவில் அதிர்ச்சியலையை உருவாக்கினாலும், முதலில்
மெகா கூட்டணி முடிவாகட்டும் என்கிறார்கள்.