Share via:
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதாவது 2014ம் ஆண்டு ஒரு டாலரின்
மதிப்பு 58 ரூபாயாக இருந்த நிலையில், ‘இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறது’ என்று
கடுமையாக எச்சரிக்கை செய்தவர் இன்றைய பிரதமர் மோடி. அவரது காலத்தில் இப்போது ரூபாயின்
மதிப்பு 90 ரூபாயைத் தொட்டிருக்கிறது. ஆனால், இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஒரு
எதிர்ப்பு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இந்த ஆண்டு முழுவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பணத்தை
திரும்ப எடுத்துச் செல்வது – அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்தது என்று
சொல்லப்படுகிறது.
2027 நிதியாண்டின் இறுதியில் ஒரு டாலருக்கு 91.5 ரூபாய் ஆகலாம்
என நிபுணர்கள் கணித்துள்ளார்கள். – இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் வரவில்லை
என்றால், ரூபாய் மேலும் பலவீனமடையலாம் டாலர் மட்டுமல்ல, யூரோ, பவுண்ட், யென் போன்ற
மற்ற நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.
இப்போது இந்தியாவின் மானம் காற்றில் பறக்கவில்லையா மோடி..? காங்கிரஸ்
கட்சிக்கு இது மோடியின் தோல்வியாகத் தெரியவில்லையா..?