News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 வெற்றிகளைப் பெற்றது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளைக் குறி வைத்திருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டில் இன்று 2 மணி நேரம் ரகசியமாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைந்திருக்கிறார். நாடு முழுவதும் தவெகவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். பிஞ்ச செருப்பை எடுத்து விஜய் அலங்காரம் செய்கிறார் என்று அவரது ஆதரவாளர்களே வருத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யை சந்தித்தபிறகு நாஞ்சில் சம்பத், ‘’கடந்த 6 ஆண்டுகளாக என்னை எந்த அரசியல் கட்சியிலும் இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன். பெரியார், அண்ணா லட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன் பாஜகவுடன் இணக்கமாக உள்ளீர்களா என விஜய்யிடம் கேட்டேன். ஆனால், விஜய் அதை மறுத்துவிட்டார். இங்கு அதிகாரத்தில் உள்ள கட்சியைக் கூர்மையாக விமர்சனம் செய்கிறேன் எனக் கூறினார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விஜய் பேசாமல் இருப்பது ஒருவகையில் நல்லது. இளைஞர்கள் மூலம் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜய்யிடம் உள்ளது என நம்புகிறேன்.

அறிவாலயத்தில் இருந்து வசை சொற்களால் வசைபாடினார்கள். அதனால் மனமுடைந்துபோனேன். திமுகவின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர். எந்தப் பரிந்துரைக்கும் திமுகவினர் முன் நான் சென்று நிற்பதில்லை. கேட்டால் சைக்கிள்கூட தரமாட்டார்கள். என் வயிற்றில் அடிப்பது போல், என் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

எந்த திசைக்கு போக வேண்டும் என்பதை தெப்பம் தீர்மானிக்க முடியாது; தண்ணீர் தான் தீர்மானிக்கும். நானொரு தெப்பம்; என்னுடைய திசையை தம்பி விஜய் தீர்மானித்திருக்கிறார். தவெக தலைவர் விஜய்யை சந்தித்த தருணத்திலிருந்து புதியதாக பிறந்ததைப்போல் எண்ணிப் பூரிக்கிறேன்.

கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். உற்சாக மனநிலையில் உள்ளேன். தவெக தலைவர் விஜய், என்னைப் பார்த்ததும், “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார். நான் மெய்சிலிர்த்துப் போனேன்.

பெரியார், காமராஜரை கொள்கைத் தலைவர்கள் என தம்பி விஜய் முன்னிறுத்துகிறார். தமிழ்நாட்டில் இனி பேசுவதற்கு நிறைய உள்ளன. பரபரப்பாகவே இருக்கும். திராவிட இயக்கத்தின் நீட்சியாக தான் விஜய்யை பார்க்கிறேன்.

என்னை முடக்கி வைத்திருந்தனர். தற்போது இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் கொடுத்திருக்கிறார். கொள்கை எதிரி என பாஜகவையும், அரசியல் எதிரி என திமுகவையும் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார். இந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன்..’’ என்று பேசியிருக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் நிலைப்பாடு தெரிவிக்காமல் கோழையாக அமைதி காப்பதுதான் துணிச்சலா என்று திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

அதேநேரம், மத்திய அரசு எடுத்த சர்வே என்று ஒன்றை இன்று ஆதவ் அர்ஜூனா டீம் வெளியிட்டுள்ளது. அதன்படி திமுகவுக்கு 90 சீட், விஜய்க்கு 70 சீட், அதிமுகவுக்கு 35 சீட், சீமானுக்கு 1 மற்றும் இழுபறி 38 என்று கூறப்பட்டுள்ளது.

சூப்பர், அப்படியே அடுத்த சர்வேயில் சி.எம். ஆகிவிட்டால் ஆட்சியைப் பிடித்துவிடலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link