News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமலாக்கத்துறை தமிழகத்தில் நுழைவதும் உடனடியாக திமுகவினர் டெல்லிக்குப் போவதும் தொடர்ந்து நடப்பதைப் பார்க்கையில் ஸ்டாலினுக்கும் மோடிக்கும் இடையில் அண்டர்கிரவுண்ட் டீலீங் இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது.

ஏனென்றால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்ததும், ஜனவரி 5 ஆம் தேதி துரைமுருகன் டெல்லி பயணமானார். ஏப்ரல் மாத இறுதியில் டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும் மே மாதம் செந்தில் பாலாஜி டெல்லிக்குப் பயணம் செய்தார். இவர்களைக் காப்பாற்ற ஸ்டாலினும் டெல்லிக்குப் போனார்.

இந்நிலையில், மே மாதம் 8 ஆம் தேதி கே.என். நேரு 1020 கோடி அளவிற்கு நகராட்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு செய்துள்ளார். அவர் மீது தமிழக டிஜிபி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து கே.என்.நேருவின் மகன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பாஜகவினரே, ‘’இந்த நேரத்தில் நிதியமைச்சர் எதுக்கு நேரு மகனை சந்திக்க வேண்டும்? இது மக்களுக்கு தவறான கண்ணோட்டம் கொடுத்துவிடும். அவர் சந்தித்தது வேறு விஷயமாக இருந்தாலும் இந்த நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுக்காமல் இருந்திருக்கலாமே… டெல்லியில் இருந்து தமிழக அரசியலை ஆட்டி வைக்கும் இரண்டாம் அம்மாக்கு இந்த அரசியல் புரியாதா?’’ என்று புலம்புகிறார்கள்.

இந்த சந்திப்பு குறித்து நேருவின் மகன் அருண்நேரு, ‘’இன்று, புது தில்லியில், பொதுமக்களின் வாழ்கையை நேரடியாக பாதிக்கும் இரண்டு முக்கியமான விவகாரங்களை மான்புமிகு நிதியமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்தேன்: கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அவசர திருத்தங்கள் — இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். PACL Ltd மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், குறிப்பாக துரையூர் பெண்களுக்கும், விரைவான பணத்தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்…’’ என்று கூறியிருக்கிறார்.

மண்டைக்கு மேல் இருக்கும் கொண்டையை மறைங்கப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link