Share via:
2026 தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும்
செயற்குழு இன்று சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவரான தமிழ்மகன்
உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொதுக்குழுவின் தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி
நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.வளர்மதி பேச்சு வைரலாகியுள்ளது.
இன்றைய பொதுக்குழுவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி,
‘’புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பற்றி பேசாமல் தமிழகத்தில் யாரும் அரசியல்
செய்ய முடியாது. சத்துணவு இருக்கும்வரை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயர் இருக்கும்.
தாலிக்கு தங்கம் என்று சொல்லுகிற வரை அம்மாவின் பெயர் இருக்கும். தொட்டில் குழந்தை
திட்டம் என்றாலும் அம்மாவின் பெயர் இருக்கும்.
புரட்சித் தலைவருக்கும், புரட்சித் தலைவிக்கும் எதிரிகள் இருந்தார்கள்.
ஆனால் துரோகிகள் இல்லை. ஆனால் அண்ணன் எடப்பாடியாருக்கு எதிரிகளும் இருக்கிறார்கள்.
துரோகிகளும் இருக்கிறார்கள். இந்த துரோகிகள் சாக்ரடீஸுக்கே விஷம் கொடுத்தவர்கள். ஏசுவை
சிலுவையில் அறைந்தவர்கள். எத்தனையோ பேர் இந்த இயக்கத்தை காட்டிக் கொடுத்துவிட்டு போனார்கள்.
ஆனாலும் இந்த இயக்கம் அழிந்துவிடவில்லை. வரபோகும் தேர்தலில் வென்று அண்ணன் எடப்பாடியார்
முதல்வர் ஆவது உறுதி.
அதிமுகவின் வயது 53. அது இன்னமும் போர்க்குணம் கொண்ட புலிதான்.
வாலை மிதிக்கலாம் என்று துணிந்துவிடாதீர்கள். எச்சரிக்கிறேன்… புலி இப்போதுதான்
வேட்டைக்கு கிளம்பியிருக்கிறது. அது நேராக கோட்டைக்குதான் போகும். நமது அண்ணனுக்காக
சிம்மாசனம் காத்திருக்கிறது. நாம் சேர்ந்து உழைப்போம் அண்ணனை முதலமைச்சர் ஆக்குவோம்…’’
என்று பரபரப்பாகப் பேசியிருக்கிறார்.
இந்த கூட்டத்தில் முக.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
பேசுபொருள் ஆகியுள்ளது.