Share via:
தேர்தலும் சர்வேயும் பிரிக்கவே முடியாத ஒன்று. சர்வே முடிவுகள்
சாதகமாக இருக்கும்போது மட்டும் நம்பிக்கை வைக்கும் கட்சிகள் எதிர்ப்பாக இருக்கும்போது,
இவையெல்லாம் பொய் என்று அடித்துவிடுவார்கள். ஆனாலும், சர்வேக்களை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டே
இருக்கிறார்கள்.
அந்த வகையில் தனியார் பத்திரிகை ஒன்று திமுகவுக்காக சர்வே எடுத்தது.
200 தொகுதிகளை வெல்வோம் என்று திமுகவும் 210 தொகுதிகள் வெல்வோம் என்று அதிமுகவும் கூறிவரும்
நிலையில் சர்வே நிலவரம் அப்படியெல்லாம் இல்லை. விஜய் தனியே நின்றால் வெல்வதற்கு வாய்ப்பே
இல்லை என்று கூறப்படும் நிலையில், அவருக்கும் சாதகமாக தொகுதிகள் இருக்கின்றன.
சென்னை மண்டலம்.
திமுக கூட்டணி – 32, அதிமுக கூட்டணி – 5, தவெக – 0, நாதக – 0.
கொங்கு மண்டலம் – திமுக கூட்டணி – 33, அதிமுக கூட்டணி – 26, தவெக
– 2, நாதக – 0.
டெல்டா மண்டலம் – திமுக கூட்டணி – 29, அதிமுக கூட்டணி – 4 தவெக
– 2 நாதக – 0,
வடக்கு மண்டலம் – திமுக கூட்டணி – 29, அதிமுக கூட்டணி – 11, தவெக
– 3, நாதக – 0.
தென் மண்டலம் – திமுக கூட்டணி – 32, அதிமுக கூட்டணி – 15, தவெக
– 1, நாதக – 0.
மொத்தமாக.. திமுக கூட்டணி – 155, அதிமுக கூட்டணி – 61, தவெக –
8 சீட் கிடைக்கிறதாம். வழக்கம் போல் சீமானுக்கு பூஜ்ஜியம். அதோடு 10 தொகுதிகள் இழுபறி
என்று வந்துள்ளனவாம். இதனால் ஸ்டாலின் செம அப்செட் ஆகியிருக்கிறாராம். அதோடு தவெக சட்டமன்றத்தில்
நுழையவே கூடாது என்பதற்கான வேலைகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.