Share via:
ஊழலை ஒழித்துக்கட்டுவதுதான் பாஜகவின் ஒரே வேலை என்று மோடியும்
அமித்ஷாவும் மேடைக்கு மேடை பேசிவருகிறார்கள். அதேநேரம், அந்த கட்சியின் அதிகாரபூர்வ
வங்கிக் கணக்கு எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பது அதிரவைத்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு 88 கோடி ரூபாயாக இருந்த பாஜகவின் வங்கி இருப்பு
2024ம் ஆண்டில் 10107 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் பொருளாளர்
அஜய் மக்கன், ‘’அரசாங்கத் திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு,
அதனைத் தங்கள் கட்சியின் கணக்கில் சேர்த்துக் கொண்ட மகா மோசடி தற்போது வெளிச்சத்துக்கு
வந்துள்ளது. தேர்தல் பத்திர ஊழல் என்ற பெயரில், இந்தியாவினுடைய பெரிய முதலாளிகள் மற்றும்
கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வசூல் செய்து,
அந்தப் பணத்தைத் தேர்தலில் செலவழித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை பாஜக வழக்கமாக
வைத்துள்ளது…’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதனபடி காங்கிரஸ் பேங்க் பேலன்ஸ் கடந்த 2004 ஆண்டில் 38 கோடி ரூபாயாக
இருந்தது. அப்போது பாஜகவின் வங்கி இருப்பு 88 கோடி ரூபாய். அதுவே இந்த 2024ம் ஆண்டு
காங்கிரஸ் கட்சியின் வங்கியிருப்பு 133 கோடியாக இருக்கையில் பாஜகவின் வங்கி இருப்பு
10,107 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தொழில் அதிபர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர்,
சிபிஐ போன்றவற்றைக் காட்டி வசூல் செய்திருப்பது தெரிய வருகிறது. இப்படி வசூல் செய்யும்
ஒரு கட்சி நேர்மையைப் பற்றியும் ஊழல் பற்றியும் பேசுவதுதான் காலக் கொடுமை.