Share via:
காருக்கு வழிவிடாமல் போன வழக்கறிஞரை திருமாவளவனின் ஆட்கள் அடித்து
உதைத்தார்கள். அதே பாணியில் எதிர்ப்பு கோஷம் போட்ட திமுக பிரமுகரை சீமானே காரில் இருந்து
இறங்கி அடித்துள்ளார். அதோடு நாம் தமிழர் தம்பிகளும் அடி பொளந்து கட்டியிருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், கோ.பொன்னேரி புறவழிச்சாலையில்
உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சர்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சீமான் அவரது காரில் புறப்பட்ட
சமயத்தில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ரங்கநாதன் அவரது காரை
வழிமறித்து கூச்சல் போட்டிருக்கிறார்.
காரை வழிமறித்து ஆபாசமாக பேசியதைக் கண்டு டென்ஷனான சீமான் உடனே
காரில் இருந்து கீழே இறங்கி அவரை அடித்தார். இதையடுத்து அண்ணன் வழியில் நாம் தமிழர்
தம்பிகள் அடிக்க்த தொடங்கினார்கள். இதனை பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினரால் தடுக்க
இயலவில்லை. சுமார் 10 நிமிடங்கள் அடித்து நொறுக்கிய பிறகு ரங்கநாதனை போலீஸார் மீட்டு
மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
ஆனால், ரங்காதனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
என்று நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து
பேசும் திமுகவினர், ‘’இதுநாள்வரை நாம் தமிழர் கட்சிக் கூட்டங்களில் புகுந்து ரவுடித்தனம்
செய்த திமுக பேடிகள் இப்போது அண்ணன் சீமான் வாகனத்தை வழிமறிக்கவும் துணிந்திருக்கின்றனர்
சட்டம்-ஒழுங்கு ஏற்கனவே சந்தி சிரிக்கிறது தன் கட்சியிலேயே ரவுடிகளை ஒழிக்க முடியாதவர்
தான் தமிழ்நாட்டில் கிழிக்கப் போகிறாரா’’ என்று கேட்கிறார்கள்.
இந்நிலையில் சீமான் மீது வழக்கு போட்டு கைது செய்ய வேண்டும் என்று
திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளனர். இந்த விஷயத்தில் சீமானை கைது
செய்யும் வரை போராட்டம் நட்த்துவோம் என்கிறார்கள்.
விரைவில் சீமான் அடித்த வீடியோ வெளியாகும் என்றும், அதன்பிறகு
நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பார்க்கலாம்.