Share via:
தேர்தல் சூடுபிடித்துவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான
தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் 11 கொண்ட குழுவை அமைத்துள்ளது திமுக. தமிழகம்
முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு துறை சார்ந்தோரிடமும் கருத்துகளை கேட்டு தேர்தல்
அறிக்கையை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம்
என்று திமுகவும் 10% கூட நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. இந்நிலையில்
வரும் தேர்தலுக்கு திமுக என்னவெல்லாம் அறிக்கையில் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று
பல்வேறு யூகங்கள் வெளியாகின்றன.
அந்த வகையில், ’’பெண்களுக்கு 1 பவுன் தங்கம் வழங்கும் திட்டம்,
ஆண்களுக்கு ரேஷன் கடையில் வாரம் ஒரு குவார்ட்டர், ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆன்மீக சுற்றுலா, தமிழ்நாட்டிற்கு என்று சொந்தமாக பெரியார் விமான சேவை.. விவேகானந்தர்,
திருவள்ளுவர் சிலைக்கு நடுவே தமிழினத்தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கல சிலை, தமிழகம்
முழுக்க மெட்ரோ ரெயில் சேவை, அனைத்து பஞ்சாயத்துக்களிலும் நீட் பயிற்சி மையம், வீட்டுக்கு
ஒருவருக்கு அனைத்து அரசு காலி பணியிடங்களும்
100 நாட்களில் நிரப்பப்படும்..’’ என்பது போல் சொல்கிறார்கள்.
இப்படியெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம், கனிமொழியை
தலைமைப் பொறுப்பில் போட்டிருப்பதற்கு பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளது. உதயநிதி தலைமையில்
குழு அமைக்கவேண்டும் என்று இளைஞரணியினர் குரல் கொடுத்துவருகிறார்கள்.