Share via:
வரும் 2026 தேர்தலில் கிறிஸ்தவ வாக்குகளில் பெரும்பான்மை ஜோசப்
விஜய் தொடங்கியிருக்கும் தவெகவுக்குப் போகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,
அதனை மீண்டும் திமுகவுக்குக் கொண்டுவர ஸ்டாலின்
திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்.
நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஸ்டாலின், ‘’இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒரு தாய் வீட்டுப் பிள்ளைகளாக வாழ வேண்டும். இது போன்ற விழாக்கள் அதற்கு துணை நிற்க வேண்டும். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்புவர்கள் உங்களுக்கு துணையாக எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
திமுக தான் சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கம். சிறுபான்மையினருக்கு பொற்காலம் என சொல்லும் ஏராளமான திட்டத்தை கொடுத்துள்ளது. இது சிலரது கண்களை உறுத்துகிறது. எப்படி தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கலாம்.
ஒன்னுக்குள் ஒன்னாக பழகும் மக்களை எதிரிகளாக பிரிக்க சிலர் யோசிக்கிறார்கள். ஆன்மிகத்தின் பெயரால் சில அமைப்புகள் அழைத்துச் செல்ல நினைக்கும் வழி வன்முறைக்கான பாதை என்பதை தமிழகம் உணர்ந்துள்ளது. சகோதரத்துவத்தையும், பகுத்தறிவையும் உணர்த்தும் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. எல்லோருக்கும் எல்லாம் என்ற இயேசுபிரான் வார்த்தைக்கு இலக்கணமாக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் உங்கள் உணர்வை தூண்டினால் அவரை சந்தேகப்படுங்கள், கவனமாக இருங்கள். குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டு வந்த போது திமுக மூலம் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டது.
துரோகம் செய்வதையும் மக்கள் நலனை அடகு வைப்பதை மட்டுமே லட்சிய அரசியலாக எடுத்துச் செல்லும் அதிமுக அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. மத்திய பாஜவை பொருத்தவரை மதசார்பின்மை என்ற வார்த்தை வேப்பங்காயை சாப்பிட்டது போல் கசக்கிறது. அதனை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்க துடியாய் துடிக்கிறார்கள்.நாட்டின் பன்முக தன்மையை சிதைத்து ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற எதேச்சதிகார எதிர்காலத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்திலும் அவர்களது பிளானை செயல்படுத்த நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதை எதிர்த்து முறியடிப்போம். இப்படிப்பட்ட ஆபத்தையும், பாஜவின் நாசகார திட்டத்தையும் எதிர்த்து நிற்கும் வலிமை தமிழகத்திற்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் உண்டு. இதுதான் நமது ஸ்டைல்’’ என்று பேசியிருக்கிறார்.
கிறிஸ்தவர்களுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை என்று கோபத்தில்
இருக்கிறார்கள் என்றாலும் பாஜகவை எதிர்க்க வேறு வழியின்றி திமுகவை ஆதரிக்கும் சூழல்
உருவாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் விஷயத்துக்குப் பிறகு திமுகவுக்கு உறுதியாகிவரும்
சிறுபான்மியினர் வாக்குகளை எப்படி சிதறடிப்பது என்பதுதான் இப்போது பாஜக, விஜய் கட்சியினர்
யோசனை. பலிக்குமா என்று பார்க்கலாம்.