News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ஏராளமான குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட இருப்பது திமுகவுக்கு மேலும் சிக்கலாக மாறும் என்றே சொல்லப்படுகிறது. இதனை சரிக்கட்டுவதற்கு ஸ்டாலின் ரகசியப் பணிகளில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் சில வாக்குச்சாவடிகளில் அசாதாரண முறையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 58 வாக்காளர்கள் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் 49 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பது வித்தியாசமாக உள்ளது..

இதேபோன்று, மன்னார்குடியில் உள்ள தூயவளனார் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வாக்குச்சாவடி உட்பட 14 வாக்குச்சாவடிகளில் 50 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சூசை ஆரம்பப் பள்ளி வாக்குச்சாவடியில் 110 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், 86 விழுக்காட்டினர் அதாவது 95 பேர் பெண்கள் ஆவர்.

இதேபோன்று, மாநிலம் முழுவதும் 35 வாக்குச்சாவடிகளில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள என்.எல்.சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 861 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 8 ஆயிரத்து 613 வாக்குச்சாவடி மையங்களில் தலா 260 பேருக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். முகவரி மாற்றம் என்ற பிரிவின் கீழ் 6 ஆயிரத்து 139 வாக்குச்சாவடிகளில் தலா 74 வாக்காளர்களுக்கு மேல் நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசும் சமூக ஆர்வலர் சாவித்திரி கண்ணன், ’’நிறைய வீட்டு முகவரியில் குடும்பங்களுக்கு சம்பந்தமில்லாத தனி நபர் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு நபர், ஒரு வீடு என்பதாக 382 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐந்து வாக்காளர்களுக்கு இரண்டு முகவரியில் ஓட்டுகள் உள்ளன.

இதுபோன்ற குளறுபடிகளை சரி செய்வதற்கு வசதியாக தேர்தலுக்கு ஒரு மாத நெருக்கத்தில் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் வாக்காளர் இறுதி பட்டியலை – மெஷின் ரீடபிள் வடிவில்- கொடுக்க வேண்டும்’’ என்றார், ராகுல்காந்தி. தேர்தல் ஆணையம் அதை செய்வதில்லை.

இந்த முறைகேடுகளை வைத்து அவதானிக்கும் போது, மின்னணு வாக்கு இயந்திரங்களில் குளறுபடிகளையும், கோளாறுகளையும் செய்து தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு அதிக ஓட்டுகள் விழுந்ததாக காண்பித்து இருக்க வாய்ப்புள்ளது என்றே எண்ண முடிகிறது. இதற்காகத் தான், நாம் வாக்கு சீட்டு முறைமையை கேட்கிறோம். இல்லையெனில், குறைந்தபட்சமாக விவிபேட்டையாவது நடைமுறைபடுத்தக் கோருகிறோம்.

போடப்படும் வாக்குகள் உண்மையில் அளிக்கப்பட்டவர்களை சென்றடைந்ததா? என்பதில் வாக்காளர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சி.சிடிவி பதிவுகளையும் தர மறுக்கிறார்கள். எதிர்கட்சிகளுக்கு படிவம் 17C கொடுக்காமல் தவிர்க்கிறார்கள்…எனில், இவர்கள் தில்லுமுல்லுகளை அரங்கேற்றவும், அதை மறைக்கவும் திட்டமிட்டு செயலாற்றுகிறார்கள் என்றே அர்த்தமாகும். மேலும், வாக்களித்தோர் எண்ணிக்கையை சரியாக அறிவிப்பதில்லை.

பதிவான வாக்கு சதவிகிதத்தை அன்றைய தினம் அறிவிப்பது ஒன்றாகவும், பல நாட்கள் கழித்து அதை அறிவிக்கும் போது வேறாகவும் உள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் வலிந்து சில மாற்றங்களை செய்கிறதோ.. என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆதாரங்களை எல்லாம் ரகசியமாகத் திரட்டிவரும் ஸ்டாலின் அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு தயாராகிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் அசருமா என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link