Share via:
சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் விஜய் கட்சியின் நிர்வாகி
ஒருவர் நீக்கப்பட்டார். ஆனால், நீக்கப்பட்ட நிர்வாகியும் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்ணும்
கூட்டாக விளக்கம் கொடுத்து தலைமையை அதிரவிட்டனர், இந்த நிலையில் பதவிக்காக விஜய் காரை
காரை வழிமறித்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.
தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய
மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி தலைமை
அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக தனக்கு வழங்கப்படும்
என எதிர்ப்பார்த்து காத்திருந்த தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், பட்டியலில் தன் பெயர்
இல்லாததால் அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் விஜய்யை சந்தித்து பேச முற்பட்டார்.
ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதையடுத்து விஜய் வீட்டு வாசலி முற்றுகைப் போராட்டம் நடத்தியதுடன்,
‘தவெகவில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை’ என நிர்வாகி
அஜிதா கண்ணீர் விட்டார். அதோடு பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்த விஜய்யின் காரை வழிமறித்து
நியாயம் கேட்டார். ஆனால், விஜய் காரில் இருந்து இறங்கவே இல்லை.
இதையடுத்து கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், சுமூகமாக
பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஆக்னஸ் இந்த விவகாரத்தை அத்தனை சுலபமாக விடப் போவதில்லை
என்கிறார்கள். ஆக்னஸ் நடவடிக்கை வைரலானதை அடுத்து, இதே பாணியில் இன்னும் நிறைய பெண்
நிர்வாகிகள் விதவிதமாகப் போராட்டம் நடத்தி வைரலாகும் முயற்சியில் இருக்கிறார்களாம்.
விஜய்க்கு வைரல் சோதனை.