News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து பிரச்னை செய்துவருவதற்கு ஜிகே மணியே முக்கிய காரணம் என்று நினைக்கிறார் அன்புமணி. அதனால்தான், முன்பே தலைமை பதவியில் இருந்து தூக்கினார். ஆனாலும் இப்போது ராமதாஸ்க்கு தூணாக ஜிகே மணியே இருக்கிறார். இந்நிலையில், ஜிகே மணியை தன்னுடைய மகளை தோற்கடிக்க அன்புமணி திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன.

டாக்டர் ராமதாஸ் ஆதரவுடன் பாமக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 4 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவுக்கு இலச்சினையை நேற்று ஜிகே மணி வெளியிட்டுப் பேசினார்.

அப்போது அவர், ‘’பொதுக்குழுவை பாமக தலைமை அறிவிக்கவில்லை’ என அன்பு மணி சொல்லியிருப்பது அநாகரிகமானது. நாடே பாராட்டும் போராளியை (ராமதாஸ்) கொச்சைப் படுத்தி வருகிறார். அன்புமணிக்கு தலைவர் மற்றும் அமைச்சர் பதவி கொடுத்து ஆனந்தக் கண்ணீர் வடித்த ராமதாஸின் கண்களில், தற்போது வேதனை கண்ணீர் வடிகிறது.

பாமக தலைவராக அன்புமணியின் பதவிக் காலம் 2025-ம் ஆண்டு மே மாதத்துடன் முடிந்த நிலையில், 2023-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரைதலைவராக நீடிக்கிறேன் என போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். தலைவராக இல்லாதவர், ‘நான் தான் கட்சி, நான்தான் தலைவர்’ என சொல்லி வருகிறார்.

பாமகவின் அடையாளம் ராமதாஸ்தான். அன்புமணியை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர். ராமதாஸால் உருவாக்கப்பட்டவர்கள், அவரது பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசுவதை கண்டிக்கிறோம். அவரது வயது என்ன..? அனுபவம் என்ன..? பாமக நிறுவனத் தலைவராக இருந்து, கட்சியை ராமதாஸ் வழி நடத்தி வருகிறார்.

2026-ல் வெற்றி கூட்டணியை அமைப்பார். பாமக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும். 100-க்கும் மேற்பட்ட தொகுதியில் பாமக வலிமையாக உள்ளது. அன்புமணியுடன் சென்றவர்கள் வருத்தப்படுகின்றனர், மன உளைச்சலில் உள்ளனர். திரும்பி வருவதற்கு சிலர் எங்களிடம் பேசி வருகின்றனர். ராமதாஸ் கைதான் ஓங்கி இருக்கும்.

தருமபுரியில், ‘ராமதாஸ்தான் ஆணி வேர்’ என்றோம். ‘அவர்தான் ஆல மரம்’ என விழுப்புரத்தில் கூறுகிறோம். கூட்டணி குறித்து பாமகவுடன் எந்த கட்சிகளும் பேசவில்லை. கட்சியில் தற்போது நெருக்கடி உள்ளது.

பாமக வாக்கு வங்கி, ராமதாஸ் பின்னால் உள்ளது. மாம்பழம் சின்னம் ராமதாஸுக்குதான் கிடைக்கும். பாமகவில் உள்ள பிரச்சினை குறித்து இருவரையும் சமாதானப்படுத்த அதிமுக, பாஜக தரப்பில் எதுவும் பேசவில்லை. நான் போட்டியிடும் தொகுதியில் அன்புமணி போட்டியிட்டாலும் எதிர்த்துப் போட்டியிட தயாராக உள்ளேன்…’’ என்று சவால் விட்டார்.

இந்நிலையில் ஜிகே மணியை தோற்கடிக்க நான் தேவையில்லை, என் மகள் போதும். சங்கமித்ராவை வைத்து ஜிகே மணியை தோற்கடிப்பேன் என்று அன்புமணி கொதித்திருக்கிறார்.

தேர்தல் செம என்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link