Share via:
மூன்றாவது முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மோடி ஆட்சியில்
இதுவரை உலகம் பார்த்திராத அதி நவீன ஊழல் அரங்கேறியுள்ளதாக தணிக்கைக் குழு ஆய்வறிக்கை
அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் 14,450 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக்த்
தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’ஒரே வங்கிக்கணக்கு பல லட்சம்
பேருக்கு இல்லாத வங்கி கணக்கில் பணம் என்று மோடியின் திட்டத்தில் 14,450 கோடி மோசடி
நடந்திருப்பதை சிஏஜி மத்திய தணிக்கைக்குழு அம்பலப்படுத்தியிருக்கிறது.
பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற பெயரில் இளைஞர்களுக்கு
பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்க தொடங்கிய திட்டத்தில் இது வரை 1.1 கோடி பேருக்கு
பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறி பயிற்சி முடிவில் ரூ.500 மற்றும் ரூ.8,000 வரை உதவித்தொகை
கொடுத்ததற்கான கூறப்படுகிறது.
இதை ஆய்வு செய்ததில் மொத்தம் பயிற்சியாளர்கள் சேர்த்தது
95,90,801 நபர்கள் என்றும் இதில் 90,66,264 பேருக்கு வங்கி கணக்கு பொருந்தவில்லை என்றும்
அதிர்ச்சி அளித்துள்ளது. மீதமுள்ள 5,24,537 பேரில் 12,122 பேருக்கு வங்கி கணக்கு உள்ளது..
52,381 பேருக்கு ஒரே வங்கிகணக்கு. மேலும் வேடிக்கை என்னவென்றால் பலரின் வங்கிக்கணக்கு
111111111(Account number) என்றும் 123456(Account number) என்றும் உள்ளது. Email
ID (இமெயில் முகவரி) 36.51% போலியானது..!!
அதிலும் CAG அனுப்பிய 171-இமெயிலுக்கு 131- பேர் ஒரே முகவரி)யில்
இருந்து பதில் அனுப்பியுள்ளனர்..!! மேலும், மேலும் CAG மட்டுமல்ல உலகமே அதிர்ந்து வருகிறது..!!
உலகில் இது போன்ற ஒரே எண்ணில் வங்கிக்கணக்கு கிடையாது…!!
பாஜக ஆளும் உத்தர பிரதேசம் மகராஷ்டிரா பீகார் ராஜஸ்தான் மாநிலங்களில்
இந்த உலகமகா மோசடி மக்கள் பணம் ஏழை, எளிய மாணவர்களுக்கு கொடுத்ததாக ரூ.14,450 கோடி
சூறையாடப்பட்டுள்ளது. இதுகுறித்து யார் பேசுவது?’’ என்று கேட்கிறார்கள்.