Share via:
விஜய் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் திரைப்படத்தின்
இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் விஜய்யுடன் நடிகர்
தனுஷ், பிரபுதேவா, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி ஆகியோர் கலந்து கொள்ள
உள்ளதாகத் தெரிகிறது.
இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டதால்
ஜனநாயகன் மீது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் மலேசியாவுக்குக்
கிளம்பிவிட்டார் விஜய். இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்டு
கோடிகளில் கல்லா கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா முழுக்க முழுக்க
சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல்
பேசக்கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டீ-ஷர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது என்றெல்லாம்
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விஜய் ரசிகர்கள் இந்த ஆடியோ விழாவை கொண்டாட முடியாத அளவுக்கு அஜிதா
அக்னல் சம்பவம் நடந்துவிட்டது. தவெகவில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக களப் பணிசெய்து
வந்த நிலையில், பதவி வழங்காமல் புறக்கணித்ததால் தூத்துக்குடியை சேர்ந்த பெண்
நிர்வாகி அஜிதா ஆக்னல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம்
பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அஜிதா ஆக்னல்.
ஆசிரியர் பயற்சி முடித்த இவர், தவெகவில் இணைந்து தீவிரமாக களப் பணியில் ஈடுபட்டு
வந்தார். தவெக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், நலத்திட்ட உதவிகள்
வழங்குதல், கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல் உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டு
வந்தார். ஆனால், கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு எதுவும்
வழங்கப்படவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த அஜிதா ஆக்னல், பனையூரில் நடிகர் விஜய் காரை
தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது அவர் தள்ளி விடப்பட்டார். தொடர்ந்து, பனையூரில்
தர்ணாவில் ஈடுபட்டார். அப்போதும் அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்த நிலையில்
உற்சாகமிழந்து காணப்பட்டதுடன், சரியாக உணவருந்ததாமல் இருந்தார். வேறு வழியின்றி
தூக்க மாத்திரைகள் தின்று, தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாளையங்கோட்டை சாலையில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.
இந்த தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா புரோகிராம்
முடித்துவிட்டு வருகிறேன். பனையூருக்குக் கூட்டிட்டு வாங்க என்று சொல்லியிருக்கிறாராம்.
அதிர்ச்சிதரும் அணுகுமுறை