Share via:
தினமும் ஒரு திட்டத்தைத் தொடங்கிவைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்குத்
தூக்கமே வராது. அந்த வகையில் அரசு மருத்துவமனை தோறும் கஞ்சா செடி வளர்க்கும் திட்டம்,
தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் வழங்கும் திட்டங்களைத் தொடங்கியிருக்கிறாரா ஸ்டாலின்
என்று கேள்வி எழுந்துள்ளது.
மயிலாப்பூரில் வனிதா என்ற பெண், தனது, வீட்டில் தண்ணீர் கேன் விநியோகம்
செய்வது போல், கள்ளச்சாரயத்தையும் விற்பனை செய்து வந்த தகவல் நேற்று வெளியானது. அவர்
,தண்ணீர் கேன் போடுவதுபோல் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
அதோடு, ஆந்திராவில் இருந்து கள்ளச்சாரத்தை வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்து
வந்ததும் தெரிய வந்துள்ளது.
அதேபோல், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் அரசு ஸ்டான்லி
மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ந்த செய்தியும் சர்ச்சையாகியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை
பெற்றுச் செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள கிருமி நீக்கல் மையம் துறையின் கட்டிடத்துக்கு
அருகாமையில் சுமார் 3 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்ந்திருக்கிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் போலீஸுக்குத் தகவல் சொல்லியும்
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் சந்தேகப்பட வைக்கிறது. இந்த செடி குறித்து
மீடியாக்களில் செய்தி வந்த பிறகே கஞ்சா செடியை வேரோடு பிடுங்கிச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் கஞ்சா, மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களின்
விற்பனை அதிகரித்துவிட்டது, தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம்
விற்பனை, கஞ்சா செடி வளர்ப்பு போன்றவை எல்லாம் அதிர வைக்கிறது.
தமிழகத்தை தலைகுனிய வைச்சுட்டீங்களே ஸ்டாலின்.