News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றக் கொண்ட உச்சநீதிமன்றம் 5ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேரும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ளது. தமிழக அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி 5 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.

இத குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ’‘‘தண்ணீர் திறந்துவிட்ட உடனேயே தமிழகத்தை வந்தடையாது. பிலிகுண்டுலு வருவதற்கே சுமார் 3 நாட்கள் ஆகிவிடும். கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்தால் நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக நேரிடும். அந்த நிலைக்கு போகமாட்டார்கள் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும் தற்போதைய நிலையில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், தமிழகத்திற்கு பங்கிட்டு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. பேச்சுவார்த்தைக்கு இசைந்தால் நமது கோரிக்கைகள் மழுங்கடிக்கப்படும் என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறத என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link