Share via:
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (போக்)
பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து பிரதமர் மோடி ஏற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரை இந்தியாவில்
உள்ள அத்தனை தலைவர்களும் வரவேற்றுள்ளனர். நடப்பது தீவிரவாதம் அல்ல இந்திய ராணுவத்தின்
தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இந்த தாக்குதல் குறித்துப் பேசிய ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட்
கவர்னர் மனோஜ் சின்ஹா, “பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து கிராமவாசிகளை பாதுகாப்பான
இடங்களுக்கு மாற்றவும், தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் போக்குவரத்தை
உறுதி செய்யவும் டி.சி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும்
உறுதி செய்வோம். ஜெய் ஹிந்த்!” என்று கூறியிருக்கிறார்.
இந்திய ராணுவத்தின் இந்த பதில் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின்
பொதுச் செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு
தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். ராணுவத்துடனும் தேசத்துடனும் தமிழ்நாடு எப்போதும்
உறுதியாக துணைநிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீரில் பயங்கரவாத நிலைகளில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலுக்கு
என் பாராட்டுகள்; பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என இபிஎஸ்
பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும்
சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம் என்று மக்களும் துணை நிற்கிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு, ‘இந்தப் போருக்கு வலுவான பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு
முழு உரிமை உண்டு. எதிரியை எப்படி சமாளிப்பது என்பது பாகிஸ்தான் தேசத்திற்கும் அதன்
ஆயுதப் படைகளுக்கும் நன்றாகத் தெரியும். எதிரி தனது தீங்கிழைக்கும் நோக்கங்களில் வெற்றிபெற
நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பணியவில்லை என்றால் ஆபத்து என்பது பாகிஸ்தானுக்கே நன்றாகத்
தெரியும்.