Share via:
இந்தியா- கனடா நாட்டுக்கு இடையேயான உறவில் விரிசல் எதிரொலியாக கனடாவுக்கான விசா சேவையை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.
கனடா நாட்டில் குடியுரிமையுடன் வசித்துவந்த காலிஸ்தான் தீவிரவாதி கடந்த ஜூன்மாதம் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்தியாவுக்கான தூதரக அதிகாரியையும் கனடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் இருந்த கனடா நாட்டு தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு 5 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஆணை பிறப்பித்தது.
இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் பஞ்சாப்பில் இருந்து கனடா நாட்டு தப்பிச்சென்றவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கனடா நாட்டிற்கு செல்வதற்கான விசாவை நிறுத்தி வைத்து இந்தியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்கான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.