News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

ஐதராபாத்தில் உள்ள ராமேஜி பிலிம்சிட்டியில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

உலகக்கோப்பை இதுவரை 18 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது. குவைத், பஹரைன், அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளை கடந்து தற்போது இந்தியா வந்தடைந்துள்ளது. ஜூன் 27ம் தேதி பயணத்தை தொடங்கிய இந்த டிராபி கடந்த 4ம் தேதி மீண்டும் இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஈஏவில் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்ட உலகக்கோப்பை தற்போது ஐதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கேரம் கார்டனில் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் கோப்பை நேற்று (செப்.20) காட்சிப்படுத்தப்பட்டது. உலகக்கோப்பையை நேரில் காண கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link