Share via:
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட லாட்டரியில் ரூ.25 கோடி பரிசுத் தொகையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில அரசு, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளின் போது லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து பரிசுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரூ.1 கோடி, ரூ.10 கோடி, ரூ.25 கோடி என பம்பர் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு லாட்டரி டிக்கெட்டின் விலையும் ரூ.500 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோவை அன்னூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வயலாரில் உள்ள லாட்டரி கடையில் 10 டிக்கெட்டுகளை வாங்கியதாக தெரிகிறது. அதில் ஒரு டிக்கெட்டில் ரூ.25 கோடிக்கான பம்பர் பரிசு கிடைத்துள்ளது. வரி பிடித்தம் போக நடராஜனுக்கு ரூ.12.88 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒணம் பண்டிகையின் போது ஆட்டோ டிரைவர் ஒருவர் பம்பர் பரிசாக ரூ.25 கோடி வென்றது குறிப்பிடத்தக்கது.