Share via:
நீதிமன்றத்துடன் ஆளும் திமுக தொடர்ந்து மோதிக்கொண்டு இருக்கிறது.
செந்தில்பாலாஜி விவகாரம், மணல் கொள்ளை, டிஜிபி நியமனம் என்று எல்லா விஷயங்களிலும் நீதிமன்றத்
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து மல்லுக்கட்டுகிறது. இதே வழியில் சவுக்கு சங்கர்
கைதுக்கும் நீதிமன்றத்தில் மோதுவதற்கு தயாராவதாகத் தெரிகிறது.
சமீபத்தில் இரண்டு வழக்கு விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு
ஜாமீன் கொடுத்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது உள்ள எல்லா வழக்குகளையும் ஒரே உத்தரவிலே
சேர்த்து, இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அதாவது இந்த காலத்தில் பழைய வழக்குகளில்
மீண்டும் மீண்டும் கைது செய்யும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதோடு, சவுக்கு சங்கரின் தனிப்பட்ட சுதந்திரம் மீண்டும் மீண்டும்
கட்டுப்படுத்தப்படுவதாக மாநில அதிகாரிகளை கடுமையாக கண்டித்த நீதிமன்றம், அடிப்படை உரிமைகளை
பயன்படுத்தும் தனிநபர்களை குறிவைப்பதை விட.. ஊழலில் ஈடுபடும் ‘பெரிய மீன்கள்’ மீது
கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சவுக்கு சங்கரின் மருத்துவ நிலையும், அவரது தனிப்பட்ட
சுதந்திரம் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டதையும் கருத்தில் கொண்டு.. 2025 டிசம்பர்
26 முதல் 2026 மார்ச் 25 வரை ஜாமீனில் விடுவிக்க இந்த நீதிமன்றம் முனைகிறது. *
சங்கரின் உடல்நிலையை (இருதய பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய்) கருத்தில்
கொண்டு, அடுத்த 3 மாதங்களுக்கு (மார்ச் 25, 2026 வரை) அவருக்கு இடைக் கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால ஜாமீன் காலத்தில், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளுக்காக அவரை மீண்டும்
மீண்டும் கைது செய்யக் கூடாது (Preventing revolving door arrests) என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு அவர் தனது பாஸ்போர்ட்டை நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்
என்றும், சாட்சிகளை கலைக்க முயலக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி
எஸ்.எம். சுப்ரமணியம் அமர்வு இந்த வழக்கை விசாரித்தபோது தமிழக காவல்துறைக்கு சில முக்கிய
கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது, சவுக்கு சங்கரை கைது செய்வதில் மட்டும் ஏன் காவல்துறை
இவ்வளவு வேகம் காட்டுகிறது? புகார் அளிக்கப்பட்ட அடுத்த நாள் அதிகாலையிலேயே அவரை கைது
செய்ய வேண்டிய அவசியம் என்ன? தனிநபர் விமர்சனங்களை விட, அரசு பெரிய அளவிலான ஊழல் வழக்குகளில்
கவனம் செலுத்த வேண்டும். கால அளவு: 2025, டிசம்பர் 26 முதல் 2026, மார்ச் 25 வரை 3
மாதங்களுக்கு இந்த ஜாமீன் பொருந்தும் என்றும் கூறியுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்டு திமுக அமைதியாக இருக்கப்போவதில்லை என்றே தெரிகிறது.
அடுத்து புதுப்புது வழக்குகள் பதியப்பட்டு கைது செய்வதற்குத் திட்டமிடுவதுடன், ஜாமீன்
மனுவை தள்ளுபடி செய்வதற்கும் தி.மு.க. திட்டமிடுவதாகத் தெரிகிறது.
சவுக்கு சங்கருக்காக நீதிமன்றத்திடம் மன்றாடும் நிலைக்கு தமிழக
அரசு போயிருப்பது வெட்கக்கேடு.