Share via:
தமிழகம் முழுவதும் மொத்தம் 40 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் சப்ளை செய்து வரும் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய மொத்தம் 40 இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் சென்னை உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய அதே இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்களை தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமானவரித்துறை சார்பில் தெரிய வந்துள்ளது.
அதன்படி சென்னை ஜாபர்கான்பேட்டை, சப்தகிரி காலனியில் உள்ள ராதா இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம் உள்ளிட்ட சோதனை படங்களை இந்த பக்கத்தில் காணலாம்.