News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

இந்தியா கூட்டணியில் இருந்து சி.பி.எம். கட்சி திடீரென்று விலகியது அக்கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பா.ஜ.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஒரே நேர்கோட்டு எண்ணத்தில் உருவானதுதான் இந்தியா கூட்டணி. இக்கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரண்ட காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்திருந்தன.

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2வது கூட்டம் கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி பெங்களூரிலும் நடைபெற்றது. 3வது கூட்டம் கடந்த செட்பம்பர் மாதம் 1ம் தேதி மும்பையில் நடைபெற்றது.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிபிஎம் கட்சி முன்னர் நடைபெற்ற 3 கூட்டங்களிலும் பங்கேற்ற நிலையில் தற்போது இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறும்போது, ‘‘இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி டெல்லியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் மற்றும் சிவசேனை கட்சிகளுடன் தங்களால் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகள் தொடர்ந்து கேரளாவில் மாறி மாறி ஆட்சி  செய்து வருகின்றது. அதேபோல் மேற்குவங்கத்தை பொறுத்த வரையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு இடையே பலத்த மோதல் இருந்து வருகிறது.

கேரளாவில் உட்கட்சி பூசல் இருக்கும் நிலையில் இந்தியா கூட்டணியில் ஒன்றாக இயங்க முடியாது என்ற நிலைப்பாட்டில்தான் சிபிஎம் விலகுவதாக அறிவித்துள்ளது தெரியவந்துள்ளது. மேற்குவங்கத்திலும் சிபிஎம்மின் நிலைப்பாடு திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக உள்ளது.

இப்படிப்பட்ட எதிர்எதிர் சூழ்நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து சிபிஎம் வெளியேறியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விரிசல் இன்னும் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link