News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

நியூசிலாந்தில் இன்று காலை உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் குடும்பத்துடன் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

5 மில்லியன் அளவுக்கு மக்களைக் கொண்ட நாடு நியூசிலாந்து. நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புகள் அடிக்கடி நடைபெறும் பசிபிக் கடலை சுற்றியுள்ள ரிங் ஆப் பையர் என அழைக்கப்படும் பகுதியில்தான் இந்த நியூசிலாந்து அமைந்துள்ளது. அதனால் நியூசிலாந்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன.

இந்நாட்டின் முக்கிய நகரமான கிறிஸ்சர்ச்சில் இருந்து மேற்கே 124 கி.மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவு அமைந்துள்ளது. இங்கு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக உணரப்பட்ட நிலநடுக்கம் 11 கி.மீட்டர் ஆழத்தில் பல்வேறு இடங்களில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூசிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிர்வாகம் சுனாமி எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை. 

நியூசிலாந்து நாடு அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை காரணமாக அதனை ‘நடுங்கும் தீவுகள்’ என்றும் பலர் நகைச்சுவையாக அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link