Share via:
காவிரி விவாகரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார்.
தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி விவகாரம் எந்த தலைமுறையில்தான் விடிவுக்கு வரும் என்பது பொதுமக்களின் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் காவிரி நீர் குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுடெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்து தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், டெல்லி சிறப்பு பிரதிநிதி கே.எஸ்.விஜயன், செல்வி எஸ்.ஜோதி மணி, முனைவர் தம்பிதுரை மற்றும் சந்திரசேகரன் (அ.தி.மு.க.) சுப்பராயன் (சி.பி.ஐ.) பி.ஆர்.நடராசன் (சி.பி.எம்.) வைகோ (ம.தி.மு.க.), தொல்திருமாளவன் எம்.பி., டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் (த.மா.கா), கே.நவாஸ் கனி (இயூமுலீ) ஏ.கே.பி.சின்னராஜ் (கொ.ம.தே.க) மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் சென்றிருந்தனர்.
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் இக்குழு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து காவிரி விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘காவிரி விவாகரத்தில் உச்சநீதிமன்றம் மூலமே இதுவரை உரிய தீர்வை பெற்றுள்ளோம்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரை சந்தித் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா என்னென்ன விவாதங்களை முன்வைப்பார் என்பது குறித்து இரு மாநில அரசுகளும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.