News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். ரவீந்திரநாத்குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரவீந்திரநாத்குமாருக்கும், அவரது மனைவி ஆனந்திக்கும்  இடையில்  சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் விரைவில்  விவாகரத்து செய்துவிட்டு பிரியப் போகிறார்கள் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதை உறுதி செய்யும் விதமாக தற்போது ரவீந்திரநாத்குமார் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரவில்லை என்றும், ஆனந்தி தரப்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும் போது ரவீந்திரநாத்குமார் நேரில் ஆஜராக நேரிடும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link