Share via:
தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவரின் இளமை மாறாத தோற்றம் 40 வயதை தாண்டியும் இவரை கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இருக்க செய்துள்ளது.
ஆரம்ப காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த திரிஷா இடையில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கடுத்தபடியாக நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம், நடிகர் ராணாவுடன் காதல் என தொடர்ந்து திரிஷாவின் திருமண செய்திகள் வந்தாலும் எதுவும் நடந்தபாடில்லை. இதனால் ரசிகர்கள் அடிக்கடி திரிஷாவிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? காதல் கல்யாணமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் நடிகை திரிஷா மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அந்த தயாரிப்பாளர் யார் என்ன என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதால், இந்த திருமண செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

