Share via:
உலகக்கோப்பை 2023ம் ஆண்டுக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வழங்கினார்.
13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே 8வது முறையாக ஆசியக் கோப்பை தொடரின் வெற்றியை இந்தியா பெற்றுள்ள நிலையில் உலகக்கோப்பைக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
இந்நிலையில் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, 2023 உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.